இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதிய வகை ஆட்டநாயகன் விருது !ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு சிறப்புப் பதக்கம் !
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி அருகே சென்று விட்ட இந்திய அணி திடீரென்று நடைபெற்ற கலவரத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி மெல்பன் மைதானத்தில் வரும் 26ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இரண்டு அணிகளும் தற்போது தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வாகும் வீரருக்கு ஆஸ்திரேலிய பழங்குடியினர் பெருமைப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பதக்கம் வழங்கப்பட உள்ளது. 1868 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் சார்பில் ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டது. அந்த அணி முதல் முறையாக இங்கிலாந்து சென்று விளையாடியது. அப்போது ஜானி முல்லாக் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
தற்போது இருக்கும் நவீன ஆஸ்திரேலிய அணிக்கு முன்பாகவே வெளிநாட்டிற்குச் சென்ற முதல் ஆஸ்திரேலிய அணி இந்த பழங்குடியின அணிதான். இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் ஜானி முல்லாக் பெருமைப்படுத்தும் விதமாக இந்த பழக்கம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஜானி முல்லாக்கின் 150 ஆவது நினைவு தினம் இந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. அப்போது ஆஸ்திரேலிய பூர்வகுடி சேர்ந்த டான் கிறிஸ்டியன் ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்ட இங்கிலாந்திற்கு விளையாட அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல் மகளிர் கிரிக்கெட் அணியில் அலிஷா கார்ட்னர் எனும் பழங்குடியின வீராங்கனை அணியில் சேர்க்கப்பட்டு இங்கிலாந்துப் பயணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் வரும் 26-ம் தேதி தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாகத் தேர்வாகும் வீரருக்கு ஜானி முல்லாக்கைப் பெருமைப்படுத்தும் விதத்தில், பூர்வீகக் குடியின் சார்பில் அணியினர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பதக்கம் வழங்கப்பட உள்ளது.
ஜானி முல்லாக்கின் உண்மையான பெயர் உன்னாரிம்மின். கடந்த 1868-ம் ஆண்டு பழங்குடியின அணியில் இடம் பெற்று கேப்டனாக உயர்ந்தவர். வலதுகை பேட்ஸ்மேன், வலதுகை பந்துவீச்சாளராக இருந்த முல்லாக், 45 போட்டிகளில் விளையாடி 1,698 ரன்கள் சேர்த்தார்.1,877 ஓவர்கள் பந்துவீசி 257 விக்கெட்டுகளையும், 831 மெய்டன்களும் எடுத்துள்ளார்.