வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி 1ம் தேதி துவங்க உள்ளது. அதே போல் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி 28ம் தேதி துவங்க உள்ளது.
இந்தநிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லதாம் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக டாம் பிலண்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளதால் டாம் லதாம் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல் வில் யங், டேரில் மிட்செல், ராஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோலஸ் போன்ற சீனியர் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் சமீபத்தில் நடந்து இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திராவிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது, அதே போல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தி வரலாறு படைத்த அஜாஸ் பட்டேலுக்கு நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை. அஜாஸ் பட்டேலுக்கு இடம் கொடுக்கப்படாதது குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் தேர்வாளர், அணியின் தேவையை கருத்தில் கொண்டே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அஜாஸ் பட்டேலுக்கு இடம் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் டிம் சவுத்தி, நீல் வாக்னர், டிரண்ட் பவுல்ட், கெய்ல் ஜெமிசன் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வங்கதேச தொடருக்கான நியூசிலாந்து அணி;
டாம் லதாம் (கேப்டன்), வில் யங், டேரியல் மிட்செல், ராஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோலஸ், டாம் பிலண்டல் (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, கெய்ல் ஜெமிசன், டிம் சவுத்தி, நீல் வாக்னர், டிரண்ட் பவுல்ட், மேட் ஹென்ரி, டீவன் கான்வே.