அயர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து; அரையிறுதிக்கு போகுமா? – இந்தியா குரூப்பை பாதிக்குமா?

அயர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து; அரையிறுதிக்கு போகுமா? - இந்தியா குரூப்பை பாதிக்குமா? 1அயர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து; அரையிறுதிக்கு போகுமா? - இந்தியா குரூப்பை பாதிக்குமா? 1

அயர்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையறுதி வாய்ப்பை அதிகரித்திருக்கிறது நியூசிலாந்து அணி.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் குரூப் 1 இல் நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் அடிலெய்டு மைதானத்தில் மோதின. இதில் நியூசிலாந்து அணி கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்தது.

கேன் வில்லியம்சன்கேன் வில்லியம்சன்

அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 35 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் இவருடன சீரான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். துவக்க வீரர் பின் ஆலன் 18 பந்துகளில் 33 ரன்கள் அடித்து சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கான்வே 28(33) ரன்கள், கிளன் பிலிப்ஸ் 17(9) ரன்கள் மற்றும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டைரல் மிச்சல் 31(21) ரன்கள் அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்திருந்தது.

அயர்லாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ்வா லிட்டில் நான்கு ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இந்த உலக கோப்பையின் முதல் ஹாட்ரிக் வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

அயர்லாந்து அணிக்கு ஸ்டிர்லிங்(37) மற்றும் பால்பெர்னே(30) இருவரும் சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து நிற்கவில்லை. ஒற்றை இழக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே அயர்லாந்து அணியால் எடுக்க முடிந்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி கிட்டத்தட்ட ஒரு காலை அரையிறுதி போட்டிக்குள் வைத்து விட்டது என்று கூறலாம்.

நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக பெர்க்யுசன் மூன்று விக்கெட்டுகளையும், இஷ் சோதி, மிச்சல் சான்ட்னர் மற்றும் டிம் சவுதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

அடுத்ததாக நடைபெறவிருக்கும் போட்டிகளில் இங்கிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆக வேண்டும். இல்லையெனில் நியூசிலாந்து அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறி விடும்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளில் யார் நல்ல ரன்ரேட் வைத்திருக்கிறார்களோ? அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடுவர்.

Mohamed:
whatsapp
line