22 வருடங்கள் கழித்து இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த நியூசிலாந்து ; இந்திய அணியின் டெஸ்ட் இடத்திற்கு ஆப்பு! !!!

நியூசிலாந்து அணி 1999 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் கடைசியாக இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வைத்து வென்றது. அதற்கு பின்னர் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து நியூசிலாந்து அணியால் வீழ்த்த முடியவில்லை.

ஆனால் 22 ஆண்டுகள் கழித்து தற்போது இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்கிற கணக்கில் வென்று வரலாற்று மிக்க வெற்றியை ருசி பார்த்து உள்ளது.

மேட் ஹென்றி அசத்தல் , 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டி வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது. இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி பத்து விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக லாரன்ஸ் மற்றும் ரோரி பர்ன்ஸ் ஆகிய இருவரும் 81 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் மிக சிறப்பாக பந்து வீசிய போல்ட் 4 விக்கெட்டுகளையும், ஹென்றி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

அதன் பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியில் கான்வே மற்றும் ராஸ் டைலர் 80 ரன்களும், வில் யங் 82 ரன்னும் குவிக்க நியூசிலாந்து அணிக்கு 388 ரன்கள் குவித்தது. 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து அணி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதன் காரணமாக வெறும் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. நியூசிலாந்து அணிகள் மிக சிறப்பாக பந்து வீசிய ஹென்றி மற்றும் வாக்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பின்னர் எளிய இலக்கை மேற்கொண்ட நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது மேட் ஹென்றிக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிசி தரவரிசை பட்டியலில் முதல் இடம்

முதல் ஆட்டத்தில் இந்திய அணி இருந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைத்த வெற்றியின் மூலம் 123 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணியை தொடர்ந்து 121 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும், 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும், 107 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

இந்த அணிகளை தொடர்ந்து பாகிஸ்தான் 5வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 6வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா அணி 7-வது இடத்திலும், இலங்கை அணி 8வது இடத்திலும், பங்களாதேஷ் அணி 9வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி பத்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.