பாகிஸ்தானை நசுக்கிய நியூசிலாந்து ! முதல் டி20 போட்டியில் அபார வெற்றி !

பாகிஸ்தானை நசுக்கிய நியூசிலாந்து ! முதல் டி20 போட்டியில் அபார வெற்றி !

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  இதன் முதல் டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்தது தனக்கு தானே குழி வெட்டிக் கொண்டது. 

40 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி.  ஜேக்கப் டஃபி இதில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் கேப்டன் சதாப் கான் 42 ரன்களும், பஹீம் அஷ்ரப் 18 பந்தில் 31 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது. ஜேக்கப் டஃபி 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். குக்கெலின் 3 விக்கெட் வீழ்த்தினார்.  

இதனைத்தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடியது. துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  ஆனால் மற்றொரு துவக்க வீரர்  டிம் செய்ஃபெர்ட் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.  மார்க் சாப்மேன் 20 பந்தில் 34 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேக்கப் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக இந்த அணியில் கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்பட வில்லை. அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அவர்களுடன் இருப்பதாக சென்றுவிட்டார். இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக செயல்பட்டார்.  இதனை அடுத்து 2வது டி20 போட்டி இந்த இரண்டு அணிகளுக்கிடையே மில்டன் மைதானத்தில் டிசம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறபோவது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.