அதிர்ச்சி :நியூசிலாந்தில் ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லிக்கு குடல் புற்றுநோய்

அதிர்ச்சி :நியூசிலாந்தில் ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லிக்கு குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஹேட்லிக்கு ஆபரேசன் நடைபெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி கடந்த 100 ஆண்டுகளாக அற்புதமான வீரர்களை கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுத்து வந்துள்ளது. அவர்களில் மிகச்சிறந்த வீரர் சர். ரிச்சர்ட் ஹாட்லி. தற்போது 66 வயதான ரிச்சர்ட் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது குடலில் ஓர் பெரிய புற்றுநோய் கட்டி வளர்ந்து வருவதாக அவரது மனைவி கூறியுள்ளார். இதற்காக தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வருடங்களாக இதற்காக மருத்துவமனையில் நோய் கண்டறியும் சிகிச்சை எடுத்துள்ளார் ரிச்சர்ட். தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து அந்த புற்றுநோய் கட்டி நீக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் அவர் இயல்பு வாழ்க்கை வாழத் துவங்கிவிடுவார் எனவும் அவரது மனைவி கூறியுள்ளார்.

ஹாட்லி உலகின் மிகச்சிறந்த வேக பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் ஆவார். 1990 இல் ஓய்வு பெற்றார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், 86 டெஸ்ட் போட்டிகளில் 432 விக்கெட்டுகளை 22.29 சராசரியில் ஹாட்லி எடுத்துள்ளார். இது தவிர, அவர் ஒரு பேட்ஸ்மேனாக, இரண்டு சதங்கள் மற்றும் 15 அரை சதம் சராசரியாக 27.16 சராசரியில் 3124 ரன்கள் குவித்துள்ளார்.

Editor:

This website uses cookies.