வேகப்பந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹேட்லிக்கு 2-வது புற்றுநோய் ஆபரேசன்


தற்போது 67 வயதாகும் ரிச்சர்ட் ஹேட்லிக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவருக்கு பரிசோதனை நடத்தியதில் குடல் பகுதியில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஆபரேசன் செய்துள்ள ஹேட்லி, சிகிச்கை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கல்லீரலிலும் புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. இதற்கும் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

Editor:

This website uses cookies.