ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு !!

ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணியுடனான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று இரவு அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத காரணத்தினால் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முதன் முறையாக வென்று சரித்திரம் படைத்துள்ளது.

இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து நேராக நியூசிலாந்திற்கு செல்லும் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் இந்த கிரிக்கெட் தொடரில் முதலில் நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று இரவு அறிவித்துள்ளது.

அதன்படி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில், டிரண்ட் பவுல்ட், டக் பிராஸ்வெல், காலின் டி முன்ரோ, லோகி ஃபெர்குசோன், மார்டின் கப்தில் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பலர் இடம்பெற்றுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் இஷ் சோதி டிம் சவுதி, மிட்செல் சாட்னர் போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி;

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரண்ட் பவுல்ட், டக் பிரேஸ்வெல், காலின் டி கிராண்ட்ஹோம், லோகி ஃபெர்குசோன், மார்டின் கப்தில், மாட் ஹென்ரி, டாம் லதாம் (விக்கெட் கீப்பர்), காலின் முன்ரோ, ஹென்ரி நிக்கோலஸ், மிட்செல் சாட்னர், இஷ் சோதி, டிம் சவுதி,ராஸ் டெய்லர்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;

விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப்  யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், கலீல் அஹமது. முகமது ஷமி.

Mohamed:

This website uses cookies.