சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்தாண்டு 2019 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை அறிமுகப்படுத்தியது 2019 முதல் 2021 மார்ச் வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளை தேர்வு செய்து இறுதிப்போட்டி நடத்தும், அந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் மாதம் நடைபெறும் என்பதை அறிவித்திருந்தது.
தற்போது முதலிடத்தில் நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தில் இந்திய அணியின் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் 4வது இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளது.
சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொரானா அச்சுறுத்தலில் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதனால் நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இதனடிப்படையில் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டியில் பங்கு பெறும் முதல் அணியாக நியூஸிலாந்து அணி தேர்வாகி விட்டது, நியூசிலாந்துடன் மோதப்போகும் அந்த மற்றுமொரு அணி எது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
இதற்கான பதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இந்த டெஸ்ட் போட்டியில் முடிவைப் பொறுத்தே, நியூசிலாந்துடன் மோதப்போகும் அந்த அணி எது என்று உறுதியாகும்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4-0,3-0,3-1,,2-1,2-0 என வெற்றி பெற்றால், இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கு பெறும் இல்லையென்றால் மற்ற மூன்று அணிகளுக்கும் அது வாய்ப்பாக அமையும்,இதனால் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டியை மற்ற அணிகளும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளனர்.
ஐசிசி உலகச் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிச்சயம் வெற்றி பெறுவதற்கு அனைத்து விதமான உத்திகளையும் கையாளும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்