T20 தொடருக்கான உலக கோப்பை தொடர் துபாய் அமீரக்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அரையிறுதிச் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது, இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி தொடரில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியை தழுவுவதே இந்திய அணியில் வேலையாக உள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக இந்திய அணியை விமர்சித்து வருகிறார்கள்.
இதனால் நியூசிலாந்து அணியை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்று இந்திய அணி திட்டம் தீட்டி வருகிறது.
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 தொடரில் விளையாட உள்ளது, ஆனால் இதில் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பெரும்பாலோனோர் இடம் பெறமாட்டார்கள் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், மேலும் நியூசிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரில் இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் கேஎல் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை வழி நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் 15 நபர் கொண்ட குழு இதுதான் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பிரடிக்ட் செய்துள்ளனர்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்கள்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா களமிறங்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ராகுல் தலைமையிலான இந்திய அணி பேட்ஸ்மேன்கள் 2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருத்ராஜ் கெய்க்ட்வாட், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அதிரடி வீரர் ரிஷப் பண்ட் வழக்கம்போல் செயலாற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.