டி.20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி; பாகிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து !!

டி.20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி; பாகிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இரு அணிகளும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன்;

பின் ஆலன், டீவன் கான்வே, கேன் வில்லியம்சன், கிளன் பிலிப்ஸ், டேரியல் மிட்செல், ஜேம்ஸ் நீசம், மிட்செல் சாட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லோகி பெர்குசன், டிரண்ட் பவுல்ட்.

பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன்;

முகமது ரிஸ்வான், பாபர் அசாம், முகமது ஹாரிஸ், சான் மசூத், இஃப்திகார் அஹமத், சாதப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், ஷாகின் அப்ரிடி.

Mohamed:

This website uses cookies.