ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 3 முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்து நியூசிலாந்து அணி சாதனை

நியூசிலாந்து பெண்கள் அணி ஒரு நாள் போட்டியில் அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் தொடர்ந்து 3 முறை 400 ரன்களுக்கும் மேல் எடுத்து சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்து அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் அமலியா கேர் அதிரடியால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 440 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே அணி என்ற சாதனையை படைத்தது.

இதற்கு முன்பாக முதல் ஒருநாள் போட்டியில் 490 ரன்கள் எடுத்தது. இது ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த சாதனையும் நியூசிலாந்து அணிக்கே சேரும். இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் 418 ரன்கள் குவித்தது.

தற்போது, 3வது போட்டியிலும் 440 ரன்கள் குவித்ததால், ஒரு தொடரில் 3 முறைக்கு மேல் 400 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே அணி என்ற பெருமையும் நியூசிலாந்து பெண்கள் அணிக்கே சேரும். பெண்கள் அணி மட்டும் இல்லை, ஆடவர் அணியும் அயர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறது.

17 வயதே ஆன அமெலியா கேர், 145 பந்துகளில் 232 ரன்கள் குவித்து, ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த பெண் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன்பாக முன்னாள் ஆஸ்திரேலியா வீராங்கனை பெலிண்டா 229 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இதை அமெலியா கேர் முறியடித்தார்.

குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசியவர் என்ற பெருமையும் அமெலியா கேர் க்கு சேரும். ஆண்கள் பெண்கள் இரண்டிலும் சேர்த்து குறைந்த வயதில் எட்டியவர் என்ற சாதனையை படைத்தார்.

இறுதியில், நியூசிலாந்து பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் அயர்லாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது.

Vignesh G:

This website uses cookies.