கிரிக்கெட் அரங்கில் புதிய சரித்திர சாதனை படைத்தது நியூசிலாந்து பெண்கள் அணி !!

கிரிக்கெட் அரங்கில் புதிய சரித்திர சாதனை படைத்தது நியூசிலாந்து பெண்கள் அணி

அயர்லாந்து அணிக்கெதிராக 50 ஓவரில் 490 ரன்கள் குவித்து நியூசிலாந்து பெண்கள் அணி உலக சாதனைப் படைத்துள்ளது.

அயர்லாந்து – நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்ஸ், வாட்கின் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். வாட்கின் 59 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Murray is a 17-year-old making her ODI debut – having only previously played in one Twenty20 international on Wednesday against the same opposition and which New Zealand won by 10 wickets.

அடுத்து பேட்ஸ் உடன் எம்எல் க்ரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அயர்லாந்து வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பேட்ஸ் 94 பந்தில் 24 பவுண்டரி, 2 சிக்சருடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். க்ரீன் 77 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 121 ரன்கள் குவித்தார்.

The White Ferns surpassed their own 21-year record of 455 in the 48th at the YMCA Sports Club. Skipper Suzie Bates top-scored with 151 from 94 balls as her team also went past England men’s mark of 444.

அதன்பின் வந்த ஏசி கெர் 45 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 81 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்துள்ளது.

இதற்கு முன்பும் நியூசிலாந்துதான் பாகிஸ்தானுக்கு எதிராக 455 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த அணியாக இருந்தது. இதை தற்போது அந்த அணியை முறியடித்துள்ளது.

Mohamed:

This website uses cookies.