காயத்தால்விலகிய ரிஷப் பண்ட்,புதிய கேப்டன் மற்றும் துணை கேப்டனை நியமித்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி ..
கேப்டன் மற்றும் துணை கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் பலத்த காயம் ஏற்பட்டு ஒரு வருட காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் கூறிவிட்டதால், எதிர்வரும் ஐபிஎல் தொடர் உலக கோப்பை தொடர் என எதிலும் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியது.
இதனால் டெல்லி கேப்பிட்டல் அணி தனது அணியின் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் தள்ளப்பட்டது. குறிப்பாக 2023 ஐபிஎல் தொடருக்கான போட்டி பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு விட்டதால் டெல்லி அணி தனது அணியின் கேப்டனை சீக்கிரமே அறிவிக்க வேண்டும் என்ற சிக்கலில் தவித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியிலிருந்து நீக்கப்பட்டு டெல்லி அணியில் 6.25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னரை ஹைதராபாத் அணி தனது அணியின் புதிய கேப்டனாக நியமித்துள்ளது.
டேவிட் வார்னர் 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தி அந்த அணிக்கு டைட்டில் பட்டதை வெற்றி கொடுத்தது மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் அணியை வழிநடத்திய அனுபவம் இருப்பதால் டெல்லி அணி இவரை தனது அணியின் புதிய கேப்டனாக அறிவித்துள்ளாத தெரிகிறது.
மேலும் தற்பொழுது நடைபெற்ற அனைத்து தொடரிலும் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக திகழும் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேலை, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டெல்லி கேப்பிடல்ஸ் அறிவித்திருக்கிறது.
இது குறித்து டெல்லி கேப்பிட்டல் அணியின் நிர்வாக குழு தெரிவித்ததாவது,“ டேவிட் வார்னர் எங்களது அணியின் கேப்டனாகவும் அவருக்கு உறுதுணையாக அக்சர் பட்டேல் துணை கேப்டனாக செயல்படுவார்” என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துருக்கிறது.