பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இல்லை… எனது ரோல் மாடல் எப்பவும் இவர் தான்; பாபர் அசாம் வெளிப்படை !!

பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இல்லை… எனது ரோல் மாடல் எப்பவும் இவர் தான்; பாபர் அசாம் வெளிப்படை

தன்னுடைய ரோல் மாடல் ஏபி டி வில்லியர்ஸ் தான் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியிடம் போராடி தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.

சொந்த நாட்டில் நடக்கும் இந்த போட்டி நிச்சயம் இங்கிலாந்து அணியை பழி தீர்க்கும் ஒரு போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் வல்லுனர்களும் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டுள்ளனர்.மேலும் இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமான ஒரு தொடராக இருப்பதால் இரு அணிகளும் நிச்சயம் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனால் போட்டி குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை இருநாட்டில் இருக்கும் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் உட்பட கிரிக்கெட் வல்லுனர்களும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரியப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடம் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை கேட்டு அறிந்து கொண்டார்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடம் தங்களுக்கு மிகப் பிடித்தமான வீரர் யார் என்று நாசர் உசேன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த பாபர் அசாம்,“நேர்மையாக சொல்லப்போனால் என்னுடைய ரோல் மாடல் சவுத் ஆப்பிரிக்கா அணியின் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் ஏபிடி வில்லியர்ஸ் தான், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் விளையாடும் ஒவ்வொரு ஷாட்டும் மிகவும் பிடிக்கும், அவர் விளையாடுவதை நான் தொலைக்காட்சியில் பார்த்தால் அடுத்த நாள் அவரை போன்று பேட்டிங் செய்வதற்கு நான் நெட்ஸில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பேன், வெளிப்படையாக சொல்லப்போனால் ஏபிடி வில்லியர்ஸை அப்படியே பார்த்து காப்பியடிப்பேன், ஏனென்றால் ஏபிடி வில்லியர்ஸ் தான் என்னுடைய முன்னுதாரணம்” என பாபர் அசாம் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர்-1-2022) ராவல் பிந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது என குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.