பாகிஸ்தானை துண்டுகளாக்கிய நியூசிலாந்து ! மீண்டும் தொடரை கைப்பற்றி அசத்தல் !

பாகிஸ்தானை துண்டுகளாக்கிய நியூசிலாந்து ! மீண்டும் தொடரை கைப்பற்றி அசத்தல் !

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டி சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அந்த போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2-வது போட்டி ஆமில்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஓரளவிற்கு நன்றாக ஆடி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. அந்த அணியின்  முகமது ஹபீஸ் 57 பந்துகளில் 99 ரன்களை குவித்தார். இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது 19 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார மார்ட்டின் கப்தில் மட்டுமே 21 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு டிம் சைஃபர்ட் மற்றும் கேப்டன் வில்லியம்சன் பார்ட்னர்ஷிப் அமைத்து 129 ரன்களை குவித்தனர்.

இறுதி வரை இருவரும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டிம் 84 ரன்களும், வில்லியம்சன் 57 ரன்களும் குவித்தனர். டிம் கடந்த போட்டியிலும் அரை சதம் விளாசியிருந்தார்.  இதற்கு முன்னதாக நடைபெற்ற முதல் டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெறப்போகிறது.

இதனை தொடர்ந்து டெஸ்ட் தொடரும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆக நடைபெறும். இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இந்த இரண்டிலுமே நியூசிலாந்து அணி தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனது சொந்த மைதானத்தில் சீரும் புலியாக வலம் வந்துகொண்டிருக்கிறது நியூசிலாந்து அணி.

Prabhu Soundar:

This website uses cookies.