ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களில் இவரும் ஒருவர் இவரை நம்பி ராஜஸ்தான் அணி இரண்டு மூன்று தடவை ஏலம் எடுத்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஆனால் இவர் மிக சுமாராக செயல்பட்டு அனைவரிடமும் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார்.
அவற்றை எல்லாம் தகர்த்து எறியும் வண்ணம் இந்த ஆண்டு நடந்த முடிந்த இரஞ்சி டிராபி தொடரை தனது அணிக்காக சிறப்பாக விளையாடி கைப்பற்றி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது பேசியுள்ள அவர் இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு தான் சிறந்த பார்மில் இருக்கப்போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரஞ்சி டிராபி தொடரில் அசத்திய ஜெய்தேவ் உணத்கட்
இந்த ஆண்டு நடந்து முடிந்த ரஞ்சி டிராபி தொடரில் சௌராஷ்டிரா அணையை மிக சிறப்பாக வழிநடத்தி முதல்முறையாக இரஞ்சி டிராபி தொடரை வெல்ல வைத்தார். மேலும் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளரும் இவர் மட்டும்தான். அந்த தொடரில் மொத்தமாக இவர் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இந்திய அணிக்கு விளையாட நான் தயாராக இருக்கிறேன்
தற்பொழுது பேசியுள்ள ஜெய்தேவ் உணத்கட், மீண்டும் இந்திய அணியில் விளையாட நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் தேர்வு குழு எப்பொழுதும் சிறந்த வீரர்களை தான் தேர்ந்தெடுக்கும். நான் சமீப காலமாக இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே நான் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவை பற்றி தற்போது பேசினால் சுயநலமாக எனக்காக பேசியது போல் இருக்கும்.
நடக்க இருக்கின்ற இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நான் இடம் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் இடம்பெறவில்லை, எனினும் இனிவரும் போட்டிகளில் என்னுடைய திறமையை காண்பித்து இந்திய அணியில் விளையாட முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.மேலும் தான் தற்பொழுது சிறந்த பார்மல் இருப்பதாகவும், இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை இதே பார்மில் இருக்கப் போவதாகவும் கூறியுள்ளார். எனவே வாய்ப்பு கிடைத்தால் நான் எப்போது வேண்டுமானாலும் என்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாட தயார் என்று ஜெயதேவ் கூறியிருக்கிறார்.
ஜெயதேவ் உணத்கட் 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவருக்கான வாய்ப்பு படிப்படியாக குறைந்தது, தற்பொழுது மீண்டும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.