அடுத்த வருட ஐபிஎல் தொடரில் ஆட போவது உறுதி; அடித்துச் சொல்லும் சுரேஷ் ரெய்னா !
கடந்த 11 வருடமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. இந்த வருட ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் நிர்வாகத்திற்கும் அவருக்கும் இடையே இருந்த சிறிய மனக்கசப்பு காரணமாக உடனடியாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு வந்து விட்டார்.
உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் இதன் காரணமாக சுரேஷின் ஆபத்து கொடி இறக்கப் போகிறார். அதன் அருமை அவர்கள் பின்னாளில் தெரியும் என்று தெரிவித்திருந்தார்.
சுரேஷ் ரெய்னாவும் இதற்கு பதிலடி கொடுத்திருந்தார். தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவின் இடம் சென்னை அணியில் நிரப்பப் படாமல் இருப்பது, அந்த அணியின் போட்டிகளிலும் பட்டவர்த்தனமாக தெரிந்தது.
அந்த அணியின் மிடில் ஆர்டர் மூலம் எப்போதும் இல்லாத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. இத்தனை ஆண்டு காலம் எப்போது ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் அப்போதெல்லாம் பிளே ஆப் சுற்றுக்கு சென்று வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னா இல்லாததால் அந்தப் பெருமையை இழந்து விட்டது.
சென்றமுறை இறுதிப்போட்டிக்கு சென்ற சென்னை அணி இந்த முறை கடைசி இடத்தை மட்டுமே பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் அடுத்த வருடமாவது சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக விளையாடுவாரா என்பது குறித்து அனைவரும் பலவாறு பேசி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சுரேஷ் ரெய்னாவும் இது குறித்து வாய்திறக்கவில்லை.
இருந்தாலும் எப்படியாவது சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. ஒரு பக்கம் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் அடுத்த வருடம் சி.எஸ்.கே விளையாட மாட்டார் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் ஆடுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் எந்த அணிக்காக ஆடப் போகிறார் என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் ஆடப் போகிறார் என்று