இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மல்லுக்கட்ட போவது யார்..? முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை
முத்தரப்பு டி.20 தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா இலங்கை மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
அதனடிப்படையில் இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வங்காள தேசம், இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் கடைசி லீக்கில் இன்று வங்காள தேசம் – இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாகும்.
முக்கியமான போட்டி என்பதால் காயத்தால் ஓய்வு பெற்று வந்த வங்காள தேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அழைக்கப்பட்டுள்ளார்.
7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். வங்காள தேச அணியின் அபு ஹைடர் நீக்கப்பட்டு ஷாகிப் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியில் சுரங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா நீக்கப்பட்டு அதானா, அமிலா அபோன்சா சேர்க்கப்பட்டுள்ளனர்.