நாங்கதாங்க பைனல் வருவோம்!! முன்னாடியே பிக்ஸ் பன்னி டிக்கெட் விற்ற ஸ்டேடியம்

ரசிகர்களின் ஆர்வம் அதிகமில்லாமல் தொடங்கிய நிடாஹஸ் முத்தரப்பு டி20 தொடர், ரசிகர்களை ஏகோபித்தமாக திருப்திப்படுத்தி முடிந்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் படுமொக்கையாய் முடிய, இலங்கைக்கு எதிராக வங்கதேசம் 214 ரன்களை சேஸிங் செய்த பின்னர், தொடர் மீது அனைவரது பார்வையும் விழுந்தது.

இலங்கையின் சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அபார பேட்டிங்கால் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மகிழ்ச்சியை இந்திய ரசிகர்களை விட இலங்கை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடினர்.

அதன்பின், ஒவ்வொரு ஆட்டமும் சிறப்பாகவே அமைய, இறுதிப் போட்டி உட்பட கடைசி இரு போட்டிகள் மட்டும் வேற லெவல் கிரிக்கெட். இந்த இரண்டிலும் வங்கதேச அணியே முக்கிய பங்கு வகித்தது. வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது ‘பக்கா கமர்ஷியல்’ அணியாக உருமாறி வருகிறது. அதாவது, தாங்கள் விளையாடும் போட்டிகளில் எப்படியாவது பரபரப்பை ஏற்படுத்தி, பார்வையாளர்களை திருப்திப்படுத்திவிடுகிறது. இதுதானே, அதிக பொருட்செலவு செய்து கிரிக்கெட்டை நடத்தும் சங்கங்களுக்கும் தேவை.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் இன்று மோத உள்ளன. இந்திய அணி மூத்த வீரர்கள் இல்லாமல், மிக இளம் அணியினரை அனுப்பிய பொழுது வறுத்தமாக இருந்தது. ஆனால் அந்த இளம் அணி, பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு தாங்கள் யார் என்பதை ஏற்கனவே நிரூபித்து வீட்டார்கள். வங்கதேச அணி ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக இருபோட்டியில் தோற்று விட்டது. இன்று இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணி எதையும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதே சிறப்பு.

 

இது ஒருபுறமிருக்க, முத்தரப்பு தொடரின் அனைத்துப் போட்டிகளும் நடந்த கொழும்புவில் உள்ள பிரேமதாஸா கிரிக்கெட் ஸ்டேடியம், முன்கூட்டியே எந்தெந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதை தீர்மானித்திருக்கும் விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடத்தியது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் விளையாடின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின.

அதாவது, இறுதிப் போட்டிக்கான கார் பார்க்கிங் டிக்கெட்டை முன்னரே அச்சடித்த பிரேமதாஸா ஸ்டேடிய நிர்வாகம், அதில் இந்தியாவும், இலங்கையும் மோதும் போட்டி என்று அச்சடித்துள்ளது.

பங்களாதேஷ் தான், ஜெயிக்குறதுக்கு முன்னாடியே ஆடுறானுங்க-னா, இவனுங்க பைனல் வரதற்கு முன்னாடி டிக்கெட்டே அடிச்சிட்டானுங்க!

Mohamed:

This website uses cookies.