கொல்கத்தா வீரர் நிதிஷ் ரானாவிற்கு திருமணம்!! நீண்ட நாள் காதலியை மணக்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியில் ஒரே திருமண கொண்டாட்டமாக உள்ளது. சென்ற வருடம் விராட் கோலி ஆரம்பித்து வைத்தது தற்போது அடுத்தடுத்து வீரர்களுக்கு திருமணம் ஆகி வருகிறது.
சென்ற வருடமே இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு திருமணம் நடைபெற்றது. பின்னர், தற்ப்போது மயான்க் அகர்வாலுக்கு தன் காதலியுடன் சென்ற வாரம் திருமணம் ஆனது.
பின்னர் பஞ்சாப் அணி வீரர் சந்தீப் சர்மாவிற்கு தனது காதலியுடன் திருமண நிச்சியம் ஆனது. தற்போது இந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பவர் டெல்லியை செந்த நிதிஷ் ராணா.
இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் சென்ற வருடம் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். மும்பை அணியின் டாப் ஆடரில் ஆடி அசத்தினார். தற்போது கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் இவர் மிடில் ஆடரில் ஆடி வருகிறார்.
24 வயதான இவருக்கு தற்போது தனது நீண்ட நாள் காதலி சாச்சியுடன் திருமணம் ஆக உள்ளது. இந்த செய்தியை நிதிஷ் ராணா இன்னும் பத்திரிகைக்கு தெரிவிக்கவில்லை.
நிதிஷ் ரானாவின் டெல்லி அணி சகா வீரர் துருவ் ஷோரே இந்த செய்தியை தனது இன்ட்கிராம் செய்தியில் வெளியிட்டார். என நண்பருக்கு திருமணம் என தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சாச்சியும் – நிதிஷ் ரானாவும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். தற்போது இந்த காதல், திருமணத்தில் முடிய உள்ளது.