சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 2021 தலைசிறந்த t20 தொடருக்கான ஆடும் லெவனை வெளியிட்டுள்ளது.
வருடம் தோறும் மூன்று விதமான தொடர்களிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுவரும், இதில் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்திய அணியில் இருந்து ஒரு வீரரை கூட சிறந்த டி20 தொடருக்கான ஆடும் லெவனில் ஐசிசி தேர்ந்தெடுக்கவில்லை, இது t20 தொடருக்கான இந்திய அணியின் நிலைமை நமக்கு உணர்த்துகிறது.
தற்பொழுது நான் ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த டி20 தொடருக்கான அட்டவணை பற்றி காண்போம்.
இதில் துவக்க வீரர்களாக கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மற்றும் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ரிஸ்வான் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் மூன்றாவது பேட்ஸ்மேனாகவும் 2021 டி20 தொடருக்கான கேப்டனாகவும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை தேர்ந்தெடுத்துள்ளது. மேற்கூறப்பட்ட மூவருமே கடந்த ஆண்டு சில சாதனைகளையும் முறியடித்துள்ளார்கள்.
இதனை அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக தென்ஆப்பிரிக் அணியின் எய்டன் மார்க்ரம், மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரையும், இவர்களையடுத்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ் ஆகிய மூவரையும் 2021 ஆம் ஆண்டில் t20 தொடருக்கான சிறந்த ஆடும் லெவனில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ஐசிசி தேர்ந்தெடுத்துள்ளது.
இதனையடுத்து 2021 ஆம் ஆண்டின் சிறந்த டி20 தொடருக்கான சுழற் பந்துவீச்சாளர்களாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்கா, தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தாப்ரிஸ் ஷம்சி ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளது, இந்த இரண்டு வீரர்களும் 2021 ஆம் ஆண்டு தனது அபாரமான பந்து வீச்சால் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
மேலும் சிறந்த ஆடும் லெவனில் வேகப்பந்து வீச்சாளர்களாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜொஸ் ஹசல்வுட், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சகீன் அஃப்ரிடி, மற்றும் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் வீரர்கள் டி20 தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுக்காததன்காரணமாக ஐசிசி வெளியிட்ட பட்டியலில் ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை, இது இந்திய ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்த காரணத்தை இந்திய அணியின் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களின் மத்தியில் விவாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.