சுப்மன் கில், விராட் கோலி எல்லாம் அப்பறம் தான்… இந்திய அணியின் வெற்றி இந்த மூன்று பேர் கையில் தான் உள்ளது; கவுதம் கம்பீர் கணிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுக்கூடிய மூன்று இந்திய வீரர்கள் யார் என்பது குறித்தான தனது தேர்வையும்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.
உலககக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் அதிகம் வாய்ப்புள்ள அணிகள் முதன்மையான அணியாக இந்திய அணியே பார்க்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், இந்திய அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுக்க வாய்ப்புள்ள மூன்று இந்திய வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “பும்ராஹ், முகமது சிராஜ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்த மூன்று வீரர்களும் இந்திய அணிக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய வீரர்களாக இருப்பார்கள். ரோஹித் சர்மாவின் தற்போதைய பார்ம் இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான். இந்தியாவின் பெரும்பாலான ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரோஹித் சர்மா அதிகமான ரன்கள் குவிப்பார்” என்று தெரிவித்தார்.
கம்பீர் கூறியதை போன்றே ரோஹித் சர்மா தற்போது மிக சிறந்த பார்மில் உள்ளார். ரோஹித் சர்மா விளையாடிய கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் நான்கு அரைசதம் அடித்துள்ளார், இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 57 பந்துகளில் 81 ரன்கள் குவித்ததும் அடங்கும்.
அதே போல் பும்ராஹ் மற்றும் முகமது சிராஜும் தற்போது மிக சிறப்பான பார்மில் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் முகமது சிராஜ் இலங்கை அணிக்கு எதிராக வெறும் 21 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பும்ராஹ்வும் குறை சொல்ல முடியாத அளவிற்கு தனது வேலையை சரியாகவே செய்து வருகிறார்.