இன்னமும் நம்ப முடியவில்லை; இந்திய அணி செய்த இந்த ஒரு சம்பவத்தை மறக்கவே முடியாது; ஆஸ்திரேலிய வீரர் ஓபன் டாக் !!

இந்திய அணி காபாவில் எங்களை மனரீதியாக உடைத்துவிட்டார்கள்! இன்னும் என்னால் அதை மறக்க முடியவில்லை – உஸ்மான் கவாஜா மனவேதனை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடைசி டெஸ்ட் போட்டி காபாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என சரி சமமாக இருந்தது. எனவே வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி போட்டி என்பதால் இந்த போட்டி அனைவரின் கவனத்திற்கும் வந்தது.

முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக லாபஸ்சாக்னே 108 ரன்கள் மற்றும் கேப்டன் பெயின் 50 ரன்கள் குவித்து இருந்தனர்.அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுந்தர் 62 ரன்களும் தாகூர் 67 ரன்களும் குவித்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்த இலக்கை எட்டி அசத்திய இந்திய அணி

இரண்டாவது இன்னிங்சை விளையாடி தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மிக சிறப்பாக விளையாடி 294 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்னும் டேவிட் வார்னர் 48 ரன்னும் எடுத்தனர்.

328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் மிக சிறப்பாக விளையாடி இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 92 ரன்னும் ரிஷப் பண்ட் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் வரலாற்று வெற்றியை பதிவு செய்து மேலும் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை பதம்பார்த்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள்

இதுகுறித்து தற்போது பேசியுள்ள உஸ்மான் கவாஜா, 4வது இன்னிங்சில் எப்பொழுதும் காபா மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றது போல் இருக்கும். அந்த போட்டியில் எப்படியும் இந்தியா தோற்று விடும் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் அவற்றை எல்லாம் தவிடுபொடியாகும் வண்ணம் இறுதிவரை நிதானமாக நின்று இந்திய அணி வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், நாதன் லியோன் என அனைவரது பந்து வீச்சையும் பதம் பார்த்தனர். ஆஸ்திரேலியாவை மனதளவில் இந்திய அணி வீழ்த்தியது என்றுதான் கூறவேண்டும். இறுதியாக இந்தியா எப்படி அந்த போட்டியில் வெற்றி பெற்றது என்று இன்னும் தன்னால் நம்ப முடியவில்லை என்று கவாஜா கூறினார்.

Prabhu Soundar:

This website uses cookies.