இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது விராட் கோலி ஓய்வை அறிவித்த பொழுது இந்திய வீரர்களின் மன நிலை எப்படி இருந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.
சமகால கிரிக்கெட் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோலி கடந்த மூன்று மாதங்களாக பல நெருக்கடியை சந்தித்து வருகிறார், முதலில் t20 தொடருக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதற்குப்பின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஒரே ஒரு கேப்டன் தான் இருக்கவேண்டும் என்பதற்காக ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவி விராட் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டது.
இந்த இரண்டு விஷயமும் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியவுடன் டெஸ்ட் தொடருக்கான கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார்.
லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை என்று பலரும் விமர்சித்தாலும், விராட் கோலியின் டெஸ்ட் தொடர் கேப்டன்ஷிப் குறித்து ஒருவருமே குறை கூறியது கிடையாது, அந்த அளவிற்கு டெஸ்ட் தொடரில் ராஜாவாக வலம் வந்த விராட் கோலியின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விராட் கோலியின் ராஜினாமா முடிவு, உடன் விளையாடிய சக வீரர்களுக்குமே மிகப்பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், விராட் கோலி டெஸ்ட் தொடருக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது அவரைத் தவிர மற்ற யாருக்குமே தெரியாது, அந்த சமயம் எங்களுக்கு மிகவும் வருத்தம் அளித்தது, ஏனென்றால் நாங்கள் அனைவரும் விராட் கோலியின் தலைமையின் கீழ் மிக சிறந்த முறையில் செயல்பபட்டோம், குறிப்பாக அயல்நாட்டு தொடர்களில் இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் மிக அருமையாக விளையாடியது, அப்படி இருக்கும்பொழுது விராட் கோலியின் இந்த முடிவு அனைவருக்குமே ஆச்சரியத்தை அளித்தது, கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெற்றிக்கு மிக அருகில் இருந்து தான் தோல்வியை தழுவினோம், அப்படியிருந்தும் விராட் கோலி ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பது தெரியவில்லை, என்ன தான் நாம் இப்பொழுது பேசினாலும் விராட்கோலி ராஜினாமா செய்துவிட்டார் அவருடைய முடிவை நாம் மதிக்கவேண்டும் என்று ஷர்துல் தாகூர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.