தோனியின் ஓய்வு முடிவை அவரே எடுப்பார். இதைப் பற்றி மற்றவர்களுக்கு பேச எவ்வித தகுதியும் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுப்பிரமணியம் பத்ரிநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடரில் பலமான அணியாக இந்தியா வலம் வந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக, அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்களில் தோல்வியைத் தழுவிய வெளியேறியது. கோப்பை கனவுடன் இருந்த ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் இத்தருணம் சுக்குநூறாகியது.
இந்திய அணியின் தோல்விக்கு நடுவரிசை பேட்டிங் மோசமாக இருந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அணியில் மாற்றம் வேண்டுமானால் அதைத்தான் முதலில் செய்ய வேண்டும். ஒரு வீரரின் ஓய்வு முடிவை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ஒட்டுமொத்த நாடே ஆவளுடன் இருப்பது வருத்தம் அளிக்கிறது என சுப்பிரமணியம் பதிரிநாத் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என அவரே தனிப்பட்ட முறையில் சிந்தித்து தெரிவிப்பார். இதைப்பற்றி பேசுவதற்கு நாம் யாரும் தகுதியானவர்கள் இல்லை. நான் இப்படி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பது நாமே அவரை வெளியே செல்ல வேண்டும் என கூறுவது போல தெரிகிறது.
உலகக் கோப்பையில் இந்திய அணியின் நடுவரிசையில் நன்றாக செயல்பட்ட ஒரே வீரர் தோனி தான். இந்தியாவிற்காக பல கோப்பைகளை பெற்றுத்தந்தவரும் இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்துச் சென்றவருமான தோனிக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருப்பது சற்றும் யோசிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
அடுத்த உலகக்கோப்பை வரை தோனியால் அணியில் நீடிக்க இயலாது. அவரின் டி20 உலகக்கோப்பை வரை அவர் இடம்பெற வேண்டும். இளம்வீரர்களுக்கு அனுபவத்தை மேலும் பகிரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.
அதேநேரம், ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருவது ஆரோக்கியமான ஒன்றாக தெரிகிறது என்றார்.