பாகிஸ்தான் லிஸ்ட்லையே இல்ல… டி.20 உலகக்கோப்பையில் இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்; சுனில் கவாஸ்கர் கணிப்பு !!

பாகிஸ்தான் லிஸ்ட்லையே இல்ல… டி.20 உலகக்கோப்பையில் இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்; சுனில் கவாஸ்கர் கணிப்பு

எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள நான்கு அணிகள் குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1ம் தேதி துவங்க உள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அமெரிக்காவும், கனடாவும் மோத உள்ளன. ஜூன் 5ம் தேதி நடைபெற இருக்கும் தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளதால், முன்னாள் இந்நாள் வீரர்கள் என பலரும் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், டி.20 உலகக்கோப்பை தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள நான்கு அணிகள் குறித்தான தனது கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து அணியும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயூடு ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை என கூறியுள்ளதோடு, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நான்கு அணிகளே அரையிறுதி  சுற்றுக்கு தகுதி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

2024 டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, விராட் கோலி, யசஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது சிராஜ்.

Mohamed:

This website uses cookies.