என் வாழ்க்கையில் இவர மாதிரி பந்துவீச்சாளர நான் பாக்கல; புலம்பும் ஸ்டீவ் ஸ்மித் !!

தனது கிரிக்கெட் கேரியரில் இந்திய வீரர் அஸ்வினை போன்று எந்த ஒரு பந்துவீச்சாளரும் தன்னை மிக எளிதாக அவுட்டாக்கியது இல்லை என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி ஸ்டீவ் ஸ்மித்தை சமாளிக்க திணறும் என்றே பல முன்னாள் வீரர்கள் கணித்தனர். ஸ்டீவ் ஸ்மித் என்ற ஒருவரை சமாளிக்கவே இந்திய அணி படாத பாடு படும் என்று பலரும் கருதிய நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தோ இந்த தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இரண்டு போட்டியிலுமே சேர்த்தே மொத்தம் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ஸ்டீவ் ஸ்மித், அதில் இரண்டு முறை அஸ்வினின் மாயஜால சுழலில் சிக்கிய விக்கெட்டை இழந்தார்.

இந்தநிலையில், அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திணறி வருவது குறித்து பேசியுள்ள ஸ்டீவ் ஸ்மித் தனது கிரிக்கெட் கேரியரில் அஷ்வினை தவிர எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் அப்படிச் செய்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், ““எனது ஆட்டத்தின் மூலம் அஷ்வினுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினேன். ஆனால் நடந்ததோ வேறு. எனது கெரியரில் அஷ்வினை தவிர எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் அப்படிச் செய்ததில்லை. வழக்கமாக நான் சுழற்பந்து வீச்சை ஆக்ரோஷமாக கையாளுவேன். ஆனால் அஷ்வினிடம் என்னால் அதை செய்ய முடியவில்லை. இது இரண்டு முனைகள் கொண்ட வாளைப் போல இருக்கிறது. இருப்பினும் களத்தில் நிலைத்து நின்று என்னால் விளையாட முடியுமென்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு தெரிந்து இந்த ஆண்டு ஒரு ஆட்டத்தில் 64 பந்துகளை நான் சந்தித்ததுதான் அதிகபட்சம் என கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.