விராட் கோலிக்கு இடம் இல்லை… 2021ம் ஆண்டிற்கான சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே !!

இந்திய அணியின் பெயர் பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2021 டெஸ்ட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நிறைவு பெறுவதால் இந்த ஆண்டிற்கான சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த அணி, சிறந்த ஆடும் லெவன் மற்றும் மோசமான செயல்பட்ட வீரர்கள் போன்ற தேர்வுகளை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் கிரிக்கெட் வல்லுநர்கள் தேர்வு செய்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இந்திய அணியின் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ளார்.

தான் தேர்வு செய்த ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக இலங்கை அணியின் கருணாரத்னே மற்றும் இந்திய அணியின் அதிரடி வீரர் ரோகித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார், இவர்கள் இருவரும் இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு 900 ரன்களுக்கு மேல் அசத்தியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மரண பார்மில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், பாகிஸ்தான் அணியின் பவாத் ஆலம் தேர்வு செய்துள்ளார்.மேலும் ஆறாவது இடத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், 7 மற்றும் 8வது இடத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் மற்றும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அஸ்வின் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளர்.

மேலும் தனது அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சகீன் அப்ரிடி, சவுத் ஆப்பிரிக்கா அணியின் அண்ட்ரிச் நோர்ட்சே, மற்றும் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் ஆகிய மூவரையும் செய்துள்ளார்.

தான் தேர்வு செய்த ஆடும் லெவனில் உலக கிரிக்கெட்டில் வல்லுநர்கள் மத்தியிலும் சிறந்த நன்மதிப்பை பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.