கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மன்விந்தர் பிஸ்லா கௌதம் காம்பீர், சுனில் நரேனை பயன்படுத்தியது போல் மற்ற எந்த கேப்டனும் பயன்படுத்தவில்லை என்று பாராட்டிப் பேசியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சுனில் நரேன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இதுவரை 134 போட்டிகளில் பங்கேற்று 143 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வரிசையில் சுனில் நரேன் ஏழாவது இடத்தில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் விதிக்கு முரணாக பந்து வீசுகிறார் என்று இடையில் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடை செய்யப்பட்ட சுனில் நரேன் மீண்டு வந்து தனது பௌலிங் ஸ்டைலை மாற்றி மீண்டும் அபாரமாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் 2011ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கௌதம் காம்பீர் தலைமையின்கீழ் விளையாடிய மன்விந்தர் பிஸ்லா பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது சுனில் நரைன் குறித்து பாராட்டு பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது,” சுனில் நரேன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பல வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் மேலும் அவர் மிகவும் திறமையாக தனது புதிய பவுலிங் ஸ்டைலை மாற்றி அதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், சுனில் நரைன் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட்டர் அவர் எப்படியாவது சிறப்பாக செயல்பட்டு தனது அணியை வெற்றிபெற வேண்டும் என்று செயல்படுவார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக சுனில் நரேனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று நான் கருதுகிறேன், சுனில் நரேன் எப்பொழுதும் சவாலை விரும்புபவர் மேலும் பவர் பிளே ஓவர்களில் மிக சிறப்பாக செயல்படக் கூடியவர், குறிப்பாக தோனி மற்றும் டேரன் சமி போன்ற அதிரடி வீரர்கள் களத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சுனில் நரேன் மிகச் சிறந்த முறையில் பந்து வீச கூடியவர், அப்படிப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சுனில் நரேனை மற்ற எந்த கேப்டனை விடவும் கௌதம் காம்பீர் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளார் என்று நரேன் குறித்தும் கௌதம் காம்பீர் குறித்தும் பிஸ்லா பாராட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.