இந்திய இதற்க்கு தகுதியற்ற நாடு.. கிரிக்கெட் தொடர்களை தடை செய்யவேண்டும்: பிரபல பாக்., முன்னாள் வீரர் சர்ச்சை பேட்டி

இந்திய இதற்க்கு தகுதியற்ற நாடு.. கிரிக்கெட் தொடர்களை தடை செய்யவேண்டும்: பிரபல பாக்., முன்னாள் வீரர் சர்ச்சை பேட்டி

இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல, அங்கு செல்லும் சர்க்காதேச கிரிக்கெட் அணிகளை ஐசிசி தடுத்து நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் மியான்தத் சர்ச்சையான கருத்தினை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் நிலவும் தீவிரவாத பதற்றத்தின் காரணமாக, பாதுகாப்பு கருதி வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்ல அச்சம் தெரிவித்து வரும் நிலை கடந்த சில வருடங்களாக நிகழ்ந்துவரும் ஒன்று.

இந்நிலையில், தற்போது இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை காரணம் காட்டி, இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல, அங்கு செல்லும் அணிகளை ஐசிசி தடுத்து நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத் சர்ச்சைக்கு உரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜாவித் மியான்தத் அளித்த பேட்டியில். “இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மற்ற சர்வதேச கிரிக்கெட் அணிகள் நன்கு கவனிக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, ஐசிசி இந்தியாவை சர்வதேச கிரிக்கெட் நடத்துவதில் இருந்து புறக்கணிக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகள் உள்பட அனைவருக்கும் இந்தியாதான் பாதுகாப்பற்ற நாடே தவிர, பாகிஸ்தான் அல்ல. மனிதர்களாகவும் விளையாட்டு வீரர்களாகவும் நாம் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த நாடே இந்தியாவில் நடப்பதை பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறது. நான் பாகிஸ்தான் சார்பாக பேசுகிறேன், இந்தியா உடனான அனைத்து விளையாட்டுக்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

உள்நாட்டு மக்களின் போராட்டத்திற்கும், சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும் இந்த சட்டதிருத்தத்தின் மூலம் முடிச்சுப்போட்டு பேச வேண்டாம் என ரசிகர்கள் பலர் பதிலடி கொடுத்துள்ளனர்.

கிரிக்கெட்டில் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், இதுபோன்று உளறுகிறார் எனவும் ரசிகர்கள் சிலர் கமெண்ட் அடிக்கின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.