சோயப் அக்தர் வீசிய அந்த பந்து! வலி கொடுத்த அந்த நினைவு! பழைய வலியை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்!

சோயப் அக்தர் வீசிய அந்த பந்து இன்னும் அந்த வலி நினைவில் இருக்கிறது பழைய நினைவை எடுத்துக்கூறிய சச்சின் டெண்டுல்கர்

2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடர் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. அதில் முதலாவதாக நடந்த ஒருநாள் போட்டியில் தனக்கு ஒரு விஷயம் நடந்ததாகவும், அதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு ஏற்ப நான் சரியாக இரும முடியவில்லை என்றும் சரியாக தூங்க முடியவில்லை என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு என்னால் இரும மற்றும் தூங்க முடியவில்லை

முதல் ஒருநாள் போட்டியில் முதலாவது பந்தை வீசினார் அதை மேற்கொண்டிருந்தேன், அந்த பந்து நேராக வந்து விலா பகுதியில் பலமாக பட்டது. அந்த அடி எனக்கு ஒன்றரை மாதங்கள் முதல் 2 மாதங்கள் வரை வலித்தது. அதற்கு பின்னர் எனக்கென தனியாக நான் ஒரு மார் கவசத்தை வடிவமைத்துக் கொண்டேன். இருந்தாலும் எனக்கு அந்த வலி இருந்து கொண்டே தான் இருந்தது.

அதன் காரணமாக இரண்டு மாதங்களாக என்னால் இரும முடியவில்லை. அதேபோல குப்புறப்படுத்து என்னால் சரியாக தூங்க முடியவில்லை அந்த வலி எனக்கு தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் அந்த வலியை பொருட்படுத்தாமல் எஞ்சி இருந்த நான்கு ஒருநாள் போட்டிகளிலும் டெஸ்ட் தொடரிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான் விளையாடினேன்.

அதனைத் தொடர்ந்து நான் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தேன். அங்கே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் அதைத் தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் பங்கேற்றேன். கிரிக்கெட் விளையாடும் நேரங்களில் நான் அந்த வலியை பெரிதாக கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

ஸ்கேன் செய்து பார்த்ததில் மருத்துவர் கூறிய அதிர்ச்சி

ஆஸ்திரேலிய தொடரில் எனக்கு இடுப்பு பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் ஏற்பட்ட நிலையில் எனக்கு மிகப் பெரிய கவலையாக பட்டதே, ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போய்விடுமோ என்று தான். ஏனென்றால் அந்த தொடர் முடிந்தவுடன் சிறிது நாட்களில் ஐபிஎல் தொடர் நடைபெற இருந்தது. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போய் விடுமோ என்று நான் பயந்து கொண்டே இருந்தேன்.

இடுப்பு பகுதியை ஸ்கேன் செய்து பார்த்ததில் மருத்துவர் எனக்கு கூடுதலாக ஒரு அதிர்ச்சியை அளித்தார். உங்களது விலா எலும்பு ஒன்று உடைந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் என்னிடம் கூறினார். நான் மருத்துவரிடம் இது முன்பே எனக்கு நடந்த ஒன்று என்று நடந்தது அனைத்தையும் அவரிடம் கூறினேன். எனினும் ஐபிஎல் தொடரில் முதல் 7 போட்டிகளில் என்னால் விளையாட முடியாமல் போனதே அதன் பின்னரே நான் வந்து விளையாடினேன் என்று இறுதியாகச் சொல்வதற்கு தன் பழைய நினைவுகளை எடுத்துக் கூறினார்

Prabhu Soundar:

This website uses cookies.