ராகுல் டிராவிட்டின் வாழ்க்கை காமிக் புத்தகமாக வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கை காமிக் புத்தகமாக வெளிவரவுள்ளது.

காமிக் புத்தகங்கள்  நட்சத்திரங்களை சூப்பர் ஹீரோக்காளாக வடிவமைக்கின்றன. சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் வரிசையில் இனி இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட்டையும் காணலாம்.

The Wall will be available in bookstores across the country as well as on Amazon. It will also be officially launched in Chennai on January 20, at Sportwalk’s monthly event which will have quizzes and other activities on sport.

டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை வரலாற்றில் இருந்து சில பகுதிகளை எடுத்து காமிக் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை டிராவிட் ரசிகர்கள்  வடிவமைத்துள்ளார். இந்த புத்தகத்திற்கு ‘தி வால்’(THE WALL) என பெயரிட்டுள்ளனர். இந்தப்புத்தகம் ஜனவரி 20ம் தேதி முதல் விற்பனையை தொடங்குகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டிராவிட்டின் 16 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை ஆராய்ந்து அதில் இருந்து சிறந்த தருணங்களை தேர்வு செய்தோம். அதில் சிறந்த 15 தருணங்களை தேர்வு செய்து அதனை பயன்படுத்தியுள்ளோம். இந்த புத்தகத்தை வரும் 20ஆம் தேதி சென்னையில் வெளியிடவுள்ளோம்.  உலகம் முழுவதும் டிராவிட்டின் காமிக் புத்தகங்கள் கிடைக்கும் என தெரிவித்தனர்.

Rahul Dravid is considered a hero by many cricket fans, especially those who saw him lead India out of many a sticky situation in the late nineties and early 2000s.

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த பொக்கிஷம். வலதுகை பேட்ஸ்மேனான இவர் இந்திய அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு முதுகெலும்பாக இருந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் தான் ராஜா. ஷேவாக், சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் போன்றோருடனான இவரது கூட்டணி கிளாசிக் ரகம். பொறுமை, அலட்டிக்கொள்ளாத ஆட்டம், அமைதியான அனுகுமுறை போன்றவை டிராவிட்டின் அடையாளம். ஜெண்டில் மேன் பேட்ஸ்மேன்.

The Chennai-based entrepreneurs first studied Dravid’s career to finalise the list of moments from the numerous ones in his almost 16-year long career.

இவரால் வெறுப்படைந்த ஃபவுளர்கள் அதிகம். எல்லைக்கோட்டில் இருந்து வேர்க்க விறுவிறுத்து ஓடி வந்து 140 – 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசினால் எந்த சலனமும் இல்லாமல் அதனை அப்படியே ஸ்டோக் வைப்பது கிளாசிக் ரகம். அந்த பந்து அவரது பேட்டில் பட்டு பிட்ச்சை கூட தாண்டாமல் அங்கேயே இருக்கும். டிராவிட் காமிக் புத்தகம் மூலம் தங்கள் ஃபேவரைட் ஹீரோவின் நினைவுகளை அவரது ரசிகர்கள் மீண்டும் அசைப்போடுவர்

Editor:

This website uses cookies.