அஸ்வின், ஜடேஜாவை நம்பாதீங்க… இந்த ஸ்பின்னர் அணியில் இருந்தால், இந்தியா உலகக்கோப்பை தட்டித்தூக்கும் – முன்னாள் இந்திய கேப்டன் கணிப்பு!

அஸ்வின், ஜடேஜாவை விட இந்த ஸ்பின்னர் அணியில் இருத்தால் இந்திய அணிக்கு உலகக்கோப்பை இறுதி என்கிறவாறு கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் கங்குலி.

50 ஓவர் போட்டிகளுக்கான உலக கோப்பை இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகளுக்கான முழு அட்டவணையும் இரு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது. அடுத்ததாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து என வரிசையாக அணிகளை எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை துவங்குவதற்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. அதற்குள் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர், அடுத்ததாக ஆசியகோப்பை தொடர், பின்னர் உலகக்கோப்பை துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் என இந்திய அணி இடைவிடாமல் விளையாடுகிறது.

இவற்றில் வீரர்களின் பர்ஃபார்மன்ஸ் வைத்து உரிய வீரர்களை உலகக்கோப்பைக்கு தேர்வு செய்வதற்காக பிசிசிஐ காத்திருக்கிறது. இதற்கிடையில் யார்? யார்? எடுக்கப்பட வேண்டும், யாருடைய செயல்பாடு முக்கியத்துவமாக இருக்கும்? என்கிற பல்வேறு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் மற்றும் ஜாம்பவான்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரையும் அணியில் எடுப்பதைவிட, இந்த ஒரு ஸ்பின்னர் இருந்தால் இந்திய அணி பல முன்னணி அணிகளை வீழ்த்துவதற்கு சரியாக இருக்கும் என்று சர்ச்சைக்குரியவாறு கருத்து தெரிவித்துள்ளார் கங்குலி.

ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். ஆனால் யுஸ்வேந்திர சஹல் சமீபகாலமாக மிகப்பெரிய தொடர்களில் விளையாடவில்லை என்றாலும் டி20, ஒருநாள் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

அஸ்வின், ஜடேஜா போன்ற முன்னணி ஸ்பின்னர்கள் இருந்தாலும், இவர்களை நம்புவதைவிட ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இந்திய மைதானங்களில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள்.

2011 உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்த பியூஸ் சாவ்லா இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்தார். 2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஹர்பஜன் சிங் சேர்ந்த பங்களிப்பை கொடுத்திருந்தார். ஆகையால் ரிஸ்ட் ஸ்பின்னர்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நம்பலாம். அவர்கள் இல்லாமல் உலகக்கோப்பைக்கு சென்றுவிடாதீர்கள்.” என்று கருத்து தெரிவித்தார் கங்குலி.

Mohamed:

This website uses cookies.