சுப்மன் கில், ரிஷப் பண்ட் எல்லாரையும் விட இந்த பையன் ரொம்ப திறமைசாலி… இந்திய அணியின் அடுத்த கேப்டனும் இவர் தான்; அம்பத்தி ராயூடு அதிரடி பேச்சு !!

சுப்மன் கில், ரிஷப் பண்ட் எல்லாரையும் விட இந்த பையன் ரொம்ப திறமைசாலி… இந்திய அணியின் அடுத்த கேப்டனும் இவர் தான்; அம்பத்தி ராயூடு அதிரடி பேச்சு

பேட்டிங்கில் தொடர்ந்து மிக சிறப்பாக செயல்பட்டு வரும் ருத்துராஜ் கெய்க்வாட்டை முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயூடு வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட்டான ருத்துராஜ் கெய்க்வாட், இரண்டாவது போட்டியில் அரைசதமும், மூன்றாவது போட்டியில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமும் அடித்து அசத்தினார்.

ருத்துராஜ் கெய்வ்காட்டின் பேட்டிங் ஸ்டைலும், அவர் விளையாடும் விதமும் பலரையும் வியப்பை ஏற்படுத்தி வருவதால், முன்னாள் வீரர்கள் பலரும் ருத்துராஜ் கெய்வாட்டை வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்வாட்டே நியமிக்கப்படுவார் என பலரும் பேசி வரும் நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட் எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயூடு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அம்பத்தி ராயூடு பேசுகையில், “ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் பெரிதாக பயன்படுத்தப்படாத வீரராக இருக்கிறார். ருத்துராஜ் கெய்க்வாட் திறமையான பேட்ஸ்மேன். அவரது திறமை சரியாக பயன்படுத்தி கொள்ளப்படுவது இல்லை. வெறும் டி.20 போட்டிகளில் மட்டும் இல்லாமல் மூன்று விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும். அவரது பேட்டிங் ஸ்டைல் தனித்துவமிக்கதாக உள்ளது. எப்படிப்பட்ட சூழ்நிலையையும் அவர் பதட்டமே இல்லாமல் செயல்படுகிறார். நிச்சயமாக ருத்துராஜ் கெய்க்வாட் எதிர்காலத்தில் மிக சிறந்த வீரராக இருப்பார். தோனியை போலவே ருத்துராஜ் கெய்க்வாட்டும் போட்டியின் போக்கை சரியாக உள்வாங்கி கொண்டு அதற்கு ஏற்ப விளையாடுபவர். எதிர்காலத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் மிக முக்கிய வீரராகவும் இருப்பார் என்றே கருதுகிறேன். தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த வாய்ப்புள்ள ருத்துராஜ் கெய்க்வாட், விரைவில் இந்திய அணியின் கேப்டனாகவும் இருப்பார் என்பதே எனது கருத்து. அதற்கான அனைத்து திறமைகளும் ருத்துராஜ் கெய்க்வாட்டிம் உள்ளது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.