2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் முதல் சுற்று ஏலத்தில் எந்த ஒரு அணியாலும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது..
எனக்கு தெரியும் முதல் சுற்றில் என்னை யாரும் எடுக்கமாட்டார்கள் எனக்கு நன்றாக தெரியும். அது எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கவில்லை. ஆகாஷ் என் மீது நல்ல எண்ணங்களை வைத்திருக்கிறார். அது எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஜாகீர்கான் சச்சின் டெண்டுல்கர் ரோகித் சர்மா இவர்கள் அனைவரும் எனக்கு நன்றாக பழக்கப்பட்டவர்கள். இவர்களுடன் ஆட எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடனான காத்திருக்கிறேன் என்று கூறினார் யுவராஜ் சிங்.
முதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை, 2-வது சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே வாங்கியது யுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்
முதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை, 2-வது சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே வாங்கியது
ஐபிஎல் வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2 நாள் முன்பு மதியம் 3.30 மணியில் இருந்து இரவு 8.40 மணி வரை நடைபெற்றது. இதில அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள்.
ஸ்டெயின், மெக்கல்லம் போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் போகவில்லை. யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதல் சுற்றில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. விலைபோகாத வீரர்கள் 2-வது சுற்றில் ஏலம் விடப்பட்டார்கள். அப்போது மும்பை இந்தியன்ஸ் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே ஏலம் எடுத்தது.
அதேபோல் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பின் இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அவர்களது அடிப்படை விலை ரூ. 20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ரஞ்சி டிராபியில் ஒரே ஓவரில் ஐந்து சிக்கர்கள் விளாசிய மும்பையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இதனால் அவருக்கான தொகை கோடியைத் தாண்டிச் சென்றது. இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐந்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
மற்றொரு ஆல்ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் போட்டி போட்டு விலையை உயர்த்தினார்கள். இதனால் வருணின் தொகை ரூ. 8 கோடியை தாண்டியது.
இதனால் உனத்கட்டின் 8.4 கோடி ரூபாயைத் தாண்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் 8.40 கோடி ரூபாய்க்கே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. இந்திய அணியில் இடம்பிடிக்காத இளம் வீரர்கள் கோடிகளை அள்ளிச் சென்றனர்.