சூரியகுமார், சர்ப்ராஸ் கான் வேண்டாம், கே.எல் ராகுலுக்கு பதில் இவரை விளையாடவையுங்கள் ; டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஸ்கெட்ச் போட்டுகொடுத்த கங்குலி..
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய கேஎல் ராகுலுக்கு பதில் இந்த வீரர் களமிறங்குவதே பொருத்தமானதாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுத்து வந்த இந்திய அணியின் அதிரடி வீரர் கே எல் ராகுல் தசை நாரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒட்டுமொத்த 2023 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
காயம் தீவிரமாக இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கேஎல் ராகுல், ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஜூன் 7-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலிய அனிக்க்கூ எதிராக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதில் இந்திய அணி சூரியகுமார் யாதவை ஸ்டான்ட்-பை வீரராக தேர்ந்தெடுத்துள்ளது.
ஆனால் டெஸ்ட் போட்டியில் டிபன்ஸிவாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் தேவை என்பதால் கே எல் ராகுலுக்கு பதில் தரமான ஒரு வீரரை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற கட்டத்தில் இந்திய அணி இருப்பதால் அதற்கான அறிவுரைகளை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இந்திய அணி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கே எல் ராகுலுக்கு பதில் எந்த வீரரை களமிறக்கினால் இந்திய அணி பலமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி இடம் கேட்கப்பட்டதற்கு., அவர் அனுபவ வீரர் ரஹானே தான் ராகுலுக்கு பதில் களமிறங்குவதற்கு தகுதியான வீரர் என பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி பேசுகையில்.,“கே எல் ராகுலுக்கு பதில் இந்திய அணியின் அனுபவ வீரர் ரஹானே தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கு சரியான வீரர், ஆனால் இந்த முடிவை அணியின் தலைமை பயிர்ச்சியாளர் டிராவிட் தான் முடிவெடுக்க வேண்டும்” என கங்குலி பேசியிருந்தார்.
ராகுலுக்கு பதில் ரஹானே தான் விளையாட வேண்டும் என கங்குலி போல் பெரும்பாலான முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.