எனக்கு தொல்லை கொடுக்கும் பேட்ஸ்மேன் இவர் மட்டும் தான்; முகமது அமீர் ஓபன் டாக்
தற்போதைய கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து வீசுவதுதான் கடினமானது என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு தண்டனை காலம் முடிவடைந்து மீண்டும் அணிக்கு திரும்பும்போது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவரை மனதார வரவேற்றார்.
முகமது ஆமிர் பல இடங்களில் விராட் கோலியின் பேட்டிங் திறமையை பாராட்டியுள்ளார். அதேபோல் விராட் கோலியும் ஆமிர் பந்து வீச்சை பாராட்டியுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸமித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோரை விட விராட் கோலி சிறந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஈஎஸ்பின்கிரிக்இன்போ-விற்கு ரேபிட்-பையர் பேட்டியளித்தார். அப்போது தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து வீசுவதுதான் கடினமானது என்று தெரிவித்துள்ளார்.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு முகமது ஆமிர் அளித்த பதில்களும்,
ஒரு சாதனையை நீங்கள் விரும்புகீர்கள் என்றால்?
மூன்று வகை கிரிக்கெட்டிலும் மூன்று ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்
நீங்கள் எப்படி நேரத்தை செலவழிக்க விரும்புவீர்கள்?
ஹோட்டலில் படம் பார்த்து
எந்த கிரிக்கெட் வீரரின் ஹேர்ஸ்டைல் பிடிக்கும்?
என்னுடைய ஹேர்ஸ்டைல் எனக்கு பிடிக்கும். அதன்பின் ஷாகித் அப்ரிடி ஹேர்ஸ்டைல்
நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசியிருக்கனும் என்றால், அது யார்?
பிரையன் லாரா. ஏனென்றால் அவரது காலக்கட்டத்தில் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம்.
உங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் மைதானம்?
இங்கிலாந்து ஓவல். அதில் எராளமான நினைவுகள் உள்ளன
நீங்கள் உங்களுடன் விளையாடும் சக வீரர் ஒருவருடன் குறும்பு செய்ய விரும்பினால்?
அது லென்டில் சிம்மன்ஸ். கராச்சி அணியில் விளையாடும்போது மிகவும் வேடிக்கையாக நடந்து கொள்வார்.