மாரடைப்பால் இறந்த 24 வயது கிரிக்கெட் வீரர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

மாரடைப்பால் இறந்த 24 வயது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

நோட்டிங்கம்ஷிறே சார்ந்த 24 வயது கிரிக்கெட் வீரரான ஜோஸ் டவுனி மாரடைப்பால் கடந்த மே 6ம் தேதி உயிரிழந்துள்ளார். அவர் இறந்த செய்தி அவரது தாயாரை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. தான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை என்று அவரது தாயார் கூறியுள்ளார்.

24 வயதான கிரிக்கெட் வீரர் ஜோஸ் டவுனி

ஜோஸ் டோனி அடிப்படையில் ஒரு ஆசிரியர் ஆவார் அவர் சமீபத்தில் தனது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவுடன், தனது காதலியுடன் லிவர்பூலுக்கு சென்றுள்ளார். இவரது அண்ணன் தம்பிகளான பெக்கி மற்றும் எல்லி இருவரும் உலக தரவரிசையில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். பெக்கி அடிப்படையில் ஒரு ஒலிம்பியன் ஆவார். எல்லி ஒரு ஜிம்னாஸ்டிக் வீரராவார்.

டவுனி அடிப்படையில் ஒரு நல்ல குணம் கொண்ட மனிதன். தனக்கு உள்ளேயும் சரி வெளியிலும் சரி அனைவரிடமும் மிகப் அன்பாக பழகக் கூடிய ஒரு மகன் அவன். அவன் பிரிந்ததில் எனக்கு இன்னும் வருத்தமாக உள்ளது என அவர் தாயார் கூறியுள்ளார்.

ஆம்புலன்ஸ் வந்து அவரை அழைத்துச் சென்றது ஆனால் கடைசி வரை அவர் கண் விழிக்க வில்லை

பிற்கென்ஹெட்டில் அன்றைய தினம் வலை பயிற்சியை மேற்கொண்டு இருந்த டவுனி நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென அவர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரை சக வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் கடைசிவரை கண் விழிக்கவில்லை.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் முன்னரே இறந்துவிட்டார் என கூறிவிட்டனர். டவுனி அடிப்படையில் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். கிளப் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராவார். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் உடைய இவர் நிறைய போட்டிகளில் விளையாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சீக்கிரம் அவன் என்னை விட்டுப் பிரிவான் என்று நினைக்கவில்லை

ரவுனி தாயார் ஹெலன் அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்துள்ளார். எனது மகன் அடிப்படையில் அனைவரிடமும் மிக சகஜமாக பேசக்கூடியவன். யாருக்காவது ஏதாவது உதவி தேவைப் பட்டால் உடனே முன்வந்து செய்பவன் அவன். தனது பட்டப்படிப்பை முடித்த உடன், காதலியுடன் லிவர்பூல் நகரத்திற்குச் சென்று வாழ்க்கையை தொடங்க ஆர்வமாக காத்திருந்தான். இந்த ஜூலை மாதம் வந்து இருந்தால் அவனுக்கு வயது 25. இவ்வளவு சீக்கிரம் அவன் என்னை விட்டுப் பிரிவார் என்று நான் நினைக்கவில்லை என அவரது தாயார் கூறியுள்ளார்.

டவுனி லார்ட் டெர்பி அகாடமியில் தனது கல்வியை பயின்றார். அவர் இறந்த செய்தியை இன்னும் தங்களால் நம்ப முடியவில்லை என அவரது ஆசிரியர்கள் கூறிவருகின்றனர். மேலும் அவர் விளையாடிய கிளப் அணி நிர்வாகமும், சக வீரர்களும் அவரது இறப்பிற்கு தங்களது அனுதாபங்களை கூறிவருகின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.