வீடியோ : நாட்டிங்ஹாம்ஷையர் அணியின் வேக பந்து வீச்சாளர் லூக்கா பிளெட்சர் தலையில் கொடூரமான காயம் ஏற்பட்டது.
லூக் பிளெட்சர், நாட்டிங்ஹாம்ஷையர் வேக பந்து வீச்சாளர், பர்மிங்காம் பியர்ஸுக்கு எதிராக நாட்வெஸ்ட் T20 போட்டியில் சனிக்கிழமையன்று அவரின் தலையில் மிகவும் பயங்கரமான காயம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் அரை மணி நேரம் தடைப்பட்டது.
இவர் இந்த போட்டியில் மிகவும் பிரபலமான வீரர் ஆவார் இவருக்கு இப்படி நடந்ததை பார்த்து அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.
இவர் தலையில் பந்து பட்டதும் உடனே நடுவர் அங்கு இருந்த மருத்துவரை வேகமாக அழைத்தார் உடனே அங்கு இருந்த மருத்துவரும் வேகமாக வந்து இவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
நீங்களே விடியோவை பாருங்கள் :
மருத்துவமனையில் இருந்து வந்த செய்தி :
தற்போது இவர் நலம் உடன் இருக்கிறார் எதிர் பார்க்கும் வகையில் இவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என மருத்துவமணையில் இருந்து செய்திகள் வந்து உள்ளது.
நாட்டிங்ஹாம்ஷையர் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் கூறியது :
இந்த கொடூரான தலை காயத்தில் இருந்து அதிஷ்டவசமாக தப்பித்து உள்ளார், சிசிச்சை முடிந்து உள்ள நிலையில் இவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனையில் இருந்து செய்திகள் வந்து உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் கூறினார்.
இந்த போட்டியில் இந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது முதலில் விளையாடிய இந்த அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்து என்பது குறிப்பிட்ட தக்கது.