வீடியோ: ஒரே பந்தில் 7 ரன்கள்.. நியூசிலாந்து vs பங்களாதேஷ் போட்டியில் நடந்த செம்ம காமெடியான சம்பவம்!!

வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஒரே பந்தில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து வங்கதேச வீரர்கள் பீல்டிங்கில் காமெடி செய்துள்ளனர். இதன் வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் வங்கதேச அணி முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. டெஸ்ட் அரங்கில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேச அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். அதேபோல் நியூசிலாந்து மைதானத்தில் வங்கதேச அணி டெஸ்ட் போட்டிகளில் பெறும் முதல் வெற்றி இதுவாக இருக்கிறது. 

வங்கதேச டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்தாலும் போட்டிக்கு நடுவே வங்கதேச வீரர்கள் செய்துவரும் செயல்கள் நகைப்பூட்டும் வகையில் இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச வீரர் டெய்லர் பந்தை மிடில் பேட்டில் அடித்தார். ஆனால் வங்கதேச பந்துவீச்சாளர் ஆர்வத்தில் அவுட் என கேட்டார். நடுவர் கொடுக்கவில்லை. இதனால் ரிவ்யூ எடுத்து அதிலும் ஏமாற்றம் அடைந்தனர். இதன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி நகைக்க வைத்துள்ளது. 

இதற்கிடையில் 2வது டெஸ்ட் போட்டியின் போது, மீண்டும் ஒருமுறை வங்கதேச வீரர்கள் காமெடி செய்துள்ளனர். போட்டியின் 26 ஆவது ஓவரில் நியூசிலாந்து வீரர் வில் யங் அடித்த பந்து பவுண்டரிக்கு அருகே சென்றது. அப்போது மூன்று ரன்களை எடுத்து விட்டனர். அதன் பிறகு, பந்து கீப்பரிடம் வீசப்பட்டது. நியூசிலாந்து வீரர்கள் உள்ளே நிற்கும்போது, வங்கதேச கீப்பர் வேண்டும் என்றே ஸ்டம்பை நோக்கி பந்தை அடிக்க முயற்சித்தார். துரதிஸ்டவசமாக அங்கு பீல்டர்கள் யாரும் இல்லை என்பதால், பந்து நேராக பவுண்டரி சென்றது. இதனால் களத்தில் இருந்த நியூசிலாந்து வீரர்கள் சிரித்துவிட்டனர்.

ஒரு நிமிடம் என்ன செய்வது என தெரியாமல் வங்கதேச விக்கெட் கீப்பர் அப்படியே சோகமாக நின்று விட்டார். இதன் வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நகைப்பூட்ட வைத்துள்ளது. 

2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் லேதம் அபாரமாக விளையாடி 252 ரன்கள் அடித்தார். கான்வெ 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் வங்கதேச அணி 30 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.