இலங்கை – நியுஸி: 2ஆம் நாள் ஆட்டமும் மழையால் ரத்து!!

இலங்கை- நியூசிலாந்துக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, கொழும்பு நகரில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் கொழும்பில் இன்று தொடங்கியது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை.  மதிய உணவு இடைவேளைக்குப்பின் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தேனீர் இடைவேளை வரை 29 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.
New Zealand’s Tim Southee, left, celebrates the dismissal of Sri Lanka’s Dimuth Karunaratne during the day two of the second test cricket match between Sri Lanka and New Zealand in Colombo, Sri Lanka, Friday, Aug. 23, 2019. (AP Photo/Eranga Jayawardena)

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம்  தொடங்க இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கீட்டது. மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருக்கும்போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கருணாரத்னே 49 ரன்களுடனும், மேத்யூஸ் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

COLOMBO, SRI LANKA – AUGUST 22: Sri Lanka captain Dimuth Karunaratne hits out during day one of the Second Test match between Sri Lanka and New Zealand at P Sara Oval Stadium on August 22, 2019 in Colombo, Sri Lanka. (Photo by Buddhika Weerasinghe/Getty Images)

 

திரிமன்னே (2 ரன்), குசல் மென்டிஸ் (32 ரன்) கேட்ச் ஆனார்கள். கேப்டன் கருணாரத்னே (49 ரன்), முன்னாள் கேப்டன் மேத்யூஸ் (0) களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மேத்யூஸ் 2 ரன்னிலும் அடுத்து வந்த பெரேராவும் டிக்வெல்லாவும் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். கருணாரத்னே 65 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

Sathish Kumar:

This website uses cookies.