ஒருநாள் தரவரிசையில் முதல் 2 இடத்தை பிடித்திற்கும் இந்திய வீரர்கள் ; யாருனு தெரிஞ்சா அசந்து விடுவீர்கள் !
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு தொடர் முடிவிலும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வரும். அந்த வகையில் தற்போது ஒருநாள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டிருக்கிறது. இதில் வீரர்கள் பலர் முன்னேற்றியும் பின்னடைவும் அடைந்து இருக்கிறார்கள். ஐசிசி வெளியிட்ட ஒரு நாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடத்தை இந்திய வீரர்கள் பிடித்து அசத்திய இருக்கின்றனர்.
இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 870 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற சுற்றுப்பயண ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். அவர் அந்த தொடரில் இரண்டு முறை அரைசதங்களை விளாசினார். இதனால் தற்போது விராட் கோலி 870 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து ஹிட்மேன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வில்லை. இருந்தாலும் அவர் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 842 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் ரோகித் சர்மா விளையாடி இருந்தால் அவர் தான் முதலிடத்தை பிடித்து இருப்பார்.
ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடத்தை இந்திய வீரர்கள் பிடித்து இருப்பதால் அனைவரும் இவர்களை பாராட்டி வருகின்றனர். ரோகித் சர்மாவை தொடர்ந்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆஸம் 837 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறார்.
இதையடுத்து நியூசிலாந்து வீரர் ரோஸ் டைலர் 818 புள்ளிகள், ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 791 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். இதையடுத்து பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் பும்ரா மூன்றாவது இடத்தையும், ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 8வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.