இந்த வருட ஐபிஎல் தொடரில் எனக்கு சிரமத்தை ஏற்படுத்திய பந்துவீச்சாளர் ரஷீத் கான் தான்! தேவ்தத் படிக்கல் ஓபன் டாக்!

இந்த வருட ஐபிஎல் தொடரில் எனக்கு சிரமத்தை ஏற்படுத்திய பந்துவீச்சாளர் ரஷீத் கான் தான் தெவ்தத் படிக்கல் ஓபன் டாக்

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் மிகச்சிறப்பாக தங்களது செயல்பாட்டை காட்டினர். பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை காட்டினார்கள். வாஷிங்டன் சுந்தர் தங்கராசு நடராஜன் வரும் சக்கரவர்த்தி முருகன் போன்ற பல வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடினர்.


பெங்களூரு அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். பெங்களூரு அணியி பல வெற்றிகளுக்கு இவரும் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்.

மேலும் 15 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் குவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். போன சீசனில் ஆர்சிபி அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த சீசனில் பார்த்தீவ் பட்டேல் பதிலாக களமிறங்கிய டேவ்தத் படிக்கல் தனது திறமையை நிரூபித்து அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார்.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடர் குறித்து பேசிய தேவ்தத் படிக்கல் யார் மிகவும் சிரமத்திற்கு உள்ளான பந்துவீச்சாளர் என்பது குறித்து பேசினார். அவர் கூறுகையில் வேகப்பந்து வீச்சு பெரிதாக என்னை துன்புறுத்தவில்லை உள்ளூர் போட்டிகளிலும் அந்த அளவிற்கு வேகமாக வீசக்கூடிய பந்துவீச்சாளர்களை பார்த்திருக்கிறேன்.

சொல்லப்போனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் எனக்கு மிகவும் சவாலானதாக இருந்த ஒரே பந்துவீச்சாளர் ரஷீத் கான் தான் வேகமாகவும் வீசுகிறார் பந்தை திருப்பவும் செய்கிறார். இது சற்று சிரமமாக இருக்கிறது அவரது பந்து வீச்சை ஆடும் போதெல்லாம் இதுபோன்ற பந்துவீச்சாளர் நான் தற்போது வரை ஆடியது இல்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

அடுத்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் அவ்வளவு தான் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதைத்தான் விரும்புவார்கள். நானும் அதனை நோக்கித்தான் பயணப்பட்டு கொண்டிருக்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார் தேவ்தத் படிக்கல்.

Prabhu Soundar:

This website uses cookies.