கொரோனா பாதிப்பா?.. மும்பையில் மூத்த கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்! சச்சின், ஸ்டீவ் வாக் அஞ்சலி!

இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்! சச்சின், ஸ்டீவ் வாக் அஞ்சலி!

உலகின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரரும் மும்பை ரஞ்சிக் கோப்பை அணியின் முன்னாள் வீரருமான வசந்த் ரைஜி இன்று மும்பையில் காலமாகியுள்ளார்.

வசந்த் ரைஜி, 1940களில் ரஞ்சிக்கோப்பை தொடரில் அறிமுகமாகி முதன்முதலாக மும்பை அணிக்காக ஆடினார். இவர் 9 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 277 ரன்கள் எடுத்துள்ளார். ரஞ்சிக் கோப்பைப் தொடரில் பம்பாய், பரோடா ஆகிய இரு அணிகளுக்காகப் பங்கேற்று தொடக்க வீரராக விளையாடியுள்ள இவர் இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இரவு 2 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்கிற சந்தேகத்தில் பரிசோதனை நடத்தியதில், எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால் இயற்க்கை மரணம் என உறுதியானது.

இவருக்கு தற்போது வயது 100 ஆகும். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. ஆதலால், உலகின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் என அறியப்பட்டார். இவரை இதுவரை பல கிரிக்கெட் வீரர்கள் இவரது வீட்டிற்க்கே நேரடியாக சென்று பார்த்திருக்கின்றனர்.

1939 ஆம் ஆண்டு கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்திய அணி ஒன்றில் முதன்முறையாக வசந்த் விளையாடினார். 1941 ஆம் ஆண்டு மும்பைக்காக அவர் களத்தில் இறங்கினார். விஜய் மெர்சன்ட் அப்போது மும்பை அணிக்குத் தலைமை தாங்கினார்.

இவர் கிரிக்கெட் வரலாற்றாசிரியர் மற்றும் சார்ட்டர்டு அக்கவுன்டென்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார். இந்தியா, சர்வதேச அளவில் தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய போது வசந்துக்கு 13 வயது மட்டுமே ஆனது.  ரைஜிக்கு 100 வயதானபோது, இந்திய கிரிக்கெட் லெஜண்டு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆகியோர் நேரில் சென்று அவரைப் சந்தித்து வாழ்த்தினை பகிர்ந்துகொண்டனர்.

 

Prabhu Soundar:

This website uses cookies.