2013ல் செய்த சர்ச்சைக்கு தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர்!

2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ராபின்சன் தனது ட்விட்டர் வலைதளத்தில் பல மோசமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். அது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிய அளவில் கோபப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவரை கண்டிக்கும் வகையில் டுவிட்டர் வலைத்தளத்தில் அவருக்கு எதிராக கண்டன குரல் எழுந்தது.

நிச்சயமாக அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கூறிவந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று அவர் தாமாக முன்வந்து தனது மன்னிப்பை பொதுவாக கேட்டுக்கொண்டார். இருப்பினும் இங்கிலாந்து நிர்வாகம் அதிரடியாக அவரை சஸ்பெண்ட் செய்துள்ள விஷயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ராபின்சன்

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி தற்போது டிராவில் முடிந்து உள்ளது. ராபின்சன் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக களம் இறங்கினார். முதல் போட்டியிலேயே மிக அற்புதமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

தற்பொழுது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்துள்ளதால் மீண்டும் அவர் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாட வேண்டி வரும். கவுண்டி கிரிக்கெட் தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை அவர் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாமல் போனது பல இங்கிலாந்து ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை கைப்பற்றிய டேவிட் கன்வாய்

இந்நிலையில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், ஆட்டநாயகன் விருதை டேவிட் கன்வாய் கைப்பற்றினார். தனது முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை கைப்பற்றியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியிருந்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 10ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.