கோவக்காரராக மாறிய கூல் கேப்டன் தல தோனி; கிரிக்கெட் வரலாற்றில் தரமான நாள் இன்று !!

கோவக்காரராக மாறிய கூல் கேப்டன் தல தோனி; கிரிக்கெட் வரலாற்றில் தரமான நாள் இன்று

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்துவதில் ஏகப்பட்ட குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையில் கடந்தாண்டு இதே நாளில் ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தா ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் சென்னை அணி வெற்றி பெற, கடைசி ஓவரில்18 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தை ரவிந்திர ஜடேஜா சிக்சருக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து இரண்டாவது பந்தை ஸ்டோக்ஸ் நோ-பாலாக வீசினார். அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார்.

மூன்றாவது பந்தில் தோனி போல்டானார். நான்காவது பந்தை ஸ்டோக்ஸ் புல் டாஸாக வீச, முதலில் களத்தில் இருந்த அம்பயர் நோ-பால் என கையை உயர்த்தினார். பின் லெக் அம்பயர் சைகை எதுவும் வழங்காததால் தன் முடிவை மாற்றினார்.

இதனால் பெவிலியனில் இருந்த தோனி ஆக்ரோஷமாக கூச்சலிட்டார். அதற்குள் களத்தில் இருந்த ஜடேஜா அம்பயரிடம் முறையிட, கடுப்பான தோனி களத்துக்குள் வந்தார். வழக்கத்துக்கு மாறாக மிகவும் ஆக்ரோஷமாக அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனியை பென் ஸ்டோக்ஸ், ரஹானே, அம்பயர்கள் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சாண்ட்னர் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க, சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பொதுவாக களத்தில் மிகவும் கூலாக செயல்படும் தோனி, தனது வழக்கத்துக்கு மாறாக கோவப்பட்டதை இந்திய ரசிகர்கள் பார்த்தனர். இந்த சம்பவம் அரங்கேறி இன்றோடு சரியாக ஓராண்டு ஆகிவிட்டது. தோனி கோவப்பட்ட சம்பவம் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.

Mohamed:

This website uses cookies.