11 வருடங்களுக்கு முன்பு இதே நாள் – சச்சின் படைத்த உலக சாதனை!

11 வருடங்களுக்கு முன்பு ஜூன் 29ம் தேதி இதே நாளில், ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கர் உலகச் சாதனை படைத்தார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின்

டெண்டுல்கர் 11 வருடங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 15,000 ரன்களைக் கடந்து உலகச் சாதனைப் படைத்தார். பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 93 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு
வழிவகுத்தார்.

யாரும் எளிதில் தொட முடியாத பல உலகச் சாதனைகளைப் படைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ரசிகர்களால் ‘கடவுள்’ என்றே அழைக்கப்படுபவர். ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்து உலகச் சாதனை படைத்த முதல் வீரரும்
டெண்டுல்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர்
மொத்தம் 18, 426 ரன்கள் அடித்துள்ளார்

அதுமட்டுமில்லாமல் ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரரும் டெண்டுல்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
16 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய சச்சின் தொடர்ந்து 24 வருடங்கள்  விளையாடினார். தான் விளையாடிய 24 ஆண்டுகளும் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்திய சச்சின், கிரிக்கெட் ஜாம்பவான் டான் ப்ராட்மானுக்கு அடுத்துச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கருதப்படுபவர்.மேலும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாரத ரத்னா
விருது வென்ற முதல் விளையாட்டு வீரரும் டெண்டுல்கரே ஆவார்.

 

Editor:

This website uses cookies.