ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவர் தான் காரணம்: விவிஎஸ் லட்சுமனன் ஓப்பன் டாக் !!!

இந்திய அணி கடைசி 2 டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு முக்கிய காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தற்பொழுது கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற ரவிச்சந்திரன் அஷ்வின் மிக பெரிய அளவில் உதவினார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரராக ஜொலித்தார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் உலக அளவில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆன ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை அடுத்து அடுத்து இவர் கைப்பற்றியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அவரை கட்டுப்படுத்துவது ஆஸ்திரேலிய அணியின் தோல்வியை சற்று உறுதிப்படுத்தியது போன்றது.

அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒருமுறை ஜொலித்தார். இங்கிலாந்து தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஒரு முக்கிய காரணமாக ரவிச்சந்திரன் அஷ்வின் விளங்கினார் என்று தற்பொழுது விவிஎஸ் லக்ஷ்மன் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப்போட்டியில் நிச்சயமாக அவர் அசத்துவார்

அதேபோல டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களை 200 முறைக்கு மேல் அவுட் ஆக்கி இருக்கிறார். நியூசிலாந்து அணியின் டேவிட் காண்வாய், டாம் லதாம்
மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை இவர் நிச்சயமாக கைப்பற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய முழு திறமையை காண்பிப்பார் என்றும் மீண்டும் இந்திய அணி வெற்றி பெற ரவிச்சந்திரன் அஸ்வின் உதவுவார் என்று இறுதியாக விவிஎஸ் லக்ஷ்மன் கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.