உலக கோப்பை யாரை இறுதிக்கு இந்தியா அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒரு அணி தான் முன்னேறும் என கணித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
உலக கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக துவங்குகிறது. குரூப் 2ல் இடம் பெற்றுள்ள இந்திய அணியுடன் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா வங்கதேசம் ஆகிய அணிகள் தற்போது இருக்கின்றன. மேலும் இரண்டு அணிகள் குவாலிபயர் சுற்றில் தகுதி பெற்று இடம்பெறும்.
வழக்கமாக இந்திய அணி உலக கோப்பைகளை வெல்லும் அணியில் ஒன்றாக கருதப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்னணி வீரர்கள் பும்ரா, ஜடேஜா போன்றோர் அணியில் இல்லாததால் உலக கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படவில்லை. இருப்பினும் ஜாம்பவான்கள் பலர் இந்திய அணியை தங்களது கணக்கில் இருந்து ஒதுக்கி வைக்காமல் பல்வேறு முன்னணி அணிகளுக்கு அச்சுறுத்தலாக இந்தியா இருக்கும் என குறிப்பிட்டிருந்தனர்.
முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பில் இந்த நான்கு அணிகள் அரையிறுதி போட்டியில் விளையாடும் என கருத்து தெரிவித்திருந்தார். அதில் குறிப்பிடத்தக்க விதமாக இந்தியா அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒரு அணி மட்டுமே அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று குறிப்பிட்டது பலரின் கவனத்தையும் ஏத்திருக்கிறது. இது குறித்து பேசி அவர் கூறுகையில்,
“குரூப் 2ல் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளில் இரண்டு அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்லும். குறிப்பாக இந்தியா அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒன்று மட்டுமே அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். நிச்சயம் சவுத் ஆப்பிரிக்கா அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என நான் கருதுகிறேன்.
குரூப் ஒன்றில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்லும். இந்த நான்கு அணிகள் தான் நிச்சயம் அரையிறுதியில் இருக்கும். இந்திய அணிக்கு சில பின்னடைவுகள் இருக்கின்றன. அதனை சரி செய்து கொண்டால் நிச்சயம் அரை இறுதி போட்டிக்கு முன்னேறலாம்.
ஒவ்வொரு போட்டியிலும் தனது தவறுகளை சரி செய்யும் விதத்தை பொறுத்து இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுமா? இல்லையா? என்பதை கூற இயலும். தற்போது வரை சந்தேகம் தான்.” என்று தெரிவித்தார்.